Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க மாநிலமான டெக்ஸாஸிலுள்ள டலஸில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பொலிஸார் கொல்லப்பட்ட நிலையில், டெக்ஸாஸின் ஆயுதங்கள் சம்பந்தமான சட்டத்தை, டலஸின் பொலிஸ் பிரதம அதிகாரியான டேவிட் பிரௌண் விமர்சித்துள்ளார்.
துப்பாக்கிக் கலாசாரத்துக்குப் பெயர் போன டெக்ஸாஸ் மாநிலத்தில், துப்பாக்கியை உரிமைப்படுத்தியுள்ளோர், தங்களது ஆயுதங்களைப் பகிரங்கமாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி காணப்படுகிறது. அத்தோடு, துப்பாக்கிகளுக்கு ஆதரவானோர், அரசியல் கருத்தொன்றை முன்வைப்பதற்காக, ஆர்ப்பாட்டங்களுக்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதை வழங்கமாகக் கொண்டுள்ளனர். டலஸில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும், சிலர் அவ்வாறு ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த டேவிட் பிரௌண், "றைபிள்களை மக்கள் கொண்டு செல்லும் போது, கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுமாயின், அது மிகவும் சவாலாக மாறும். அவர்கள் ஓடத் தொடங்குவார்கள், அப்போது அவர்கள் துப்பாக்கிதாரிகளா, இல்லையா என்று எமக்குத் தெரியாது. அனைவரும் சுட ஆரம்பித்தால் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று எமக்குத் தெரியாது" என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஆயுங்களைக் கட்டுப்படுத்துதலென்பது, பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வாதமென்ற நிலையில், ஆயுதக்கட்டுப்பாட்டுச் சட்டங்கள் தொடர்பாக பிரௌணிடம் கேட்கப்பட்டபோது, "சட்டங்களை இயற்றுவோரை எதையாவது செய்யச் சொல்லுங்கள், எனது கருத்தை நான் சொல்கிறேன். உங்களது வேலையைச் செய்யுங்கள், நாங்கள் எங்களுடைய வேலையைச் செய்கிறோம். எங்களது உயிர்களைப் பணயம் வைத்து, நாம் பயணிக்கிறோம். அரசாங்கத்தின் ஏனைய தரப்புகளும் முன்வந்து, எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட டலஸ் பகுதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025
11 Jul 2025