2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தென்கொரிய கப்பல் மூழ்கியது; 11 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரிய கடற்பரப்பில் கப்பலொன்று மூழ்கியமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 04 கப்பல் பணியாளர்களை தென் கொரிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், மொத்தமாக 11 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரிய கடற்பரப்பில் கடந்த 16ஆம் திகதி இக்கப்பல் மூழ்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. 152 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் தனியொரு பாடசாலையின் பதின்ம வயது  மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கப்பல் உரிமையாளர்களுடன் தொடர்புடைய கம்பனிகளின் அலுவலகங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக புதன்கிழமை அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு முன்பாக மலர்கள் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மேலும், கப்பல் கவிழ்ந்தமைக்கான காரணத்தை  கண்டுபிடிக்கவேண்டுமெனும் பொதுமக்களின் அழுத்தத்தின் கீழ் அரசாங்கம் உள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .