Super User / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 14 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிது. மோசமான வானிலையே இவ்விபத்துக்கு காரணம்.
நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியமான லுக்லாவிற்குச் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் தலைநகர் காத்மண்டுவுக்கு திரும்பிவந்துகொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சிறிய விமானத்தில் 11 பயணிகளும் 3 விமான உத்தியோகஸ்தர்களும் இருந்தனர். பலியானவர்களில் 6 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, விமானம் விழுந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் அடைவது சிரமமாகவுள்ளதாக நேபாள அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகொப்டர்களை அனுப்பியபோதிலும் கடும் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை அவை அடையவில்லை என காத்மண்டு விமான நிலைய அதிகாரி திரிரட்ணா மனாதர் கூறியுள்ளார்.
4 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago