2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பாகிஸ்தான் வான் விபத்தில் 15 மாணவர்கள் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று  விபத்துக்குள்ளானதில் சுமார் 15 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

அத்துடன், சாரதி உட்பட 5 மாணவர்கள் காயமடைந்துள்ள அதேவேளை, இரு ஆசிரியர்கள் உட்பட மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான்   ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வானின் சாரதியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .