2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சகோதரனின் துப்பாக்கிப் பிரயோகத்தால் 2 வயதான சிறுவன் பலி

Super User   / 2010 ஜூலை 11 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 வயதான குழந்தையொன்று தனது சகோதரனின் துப்பாக்கிப் பிரயோகத்தால் பலியான சம்பவம் அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 9 வயதான சிறுவனொருவன் தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியின் விசையை தவறுதலாக அழுத்தியபோது அவனின் 2 வயதான சகோதரன் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

குடும்பத்தினரிடம்  நடத்திய விசாரணைகளின் மூலம் மேற்படி சிறுவன் துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுவன் மீது கிரிமினல் குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். குறித்த சிறுவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--