2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆசிப் அலி சர்தாரி கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முதல்முறையாக நேற்று வியாழக்கிழமை நேரில்ச் சென்று பார்வையிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஆசிப் அலி சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டித் தருவதாக ஆசிப் அலி சர்தாரி உறுதியளித்ததாக அவரின் பேச்சாளர் கூறினார்.

பாகிஸ்தானில் பெய்து வந்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 1,600 மக்கள் உயிரிழந்ததுடன், 14 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--