Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவியளிக்குமாறு சர்வதேச சமூகத்திடம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பான் கீ மூன் ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே சர்வதேச சமூகத்திடம், அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இங்கு தனது கவலையை வெளிப்படுத்திய பான் கீ மூன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறும் கோரினார்.
பாகிஸ்தான் ராவல்பிண்டிக்கு விஜயம் செய்த பான் கீ மூன் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா ஹிலானி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
பாகிஸ்தானில் பெய்து வந்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.
இதற்கிடையில், இவ்வாறு வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கொலரா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago