Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லியில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான விளையாட்டுக் கிராமத்தின் நிலைமையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்திடம், பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
போட்டியாளர்களின் தங்குமிடம் ஒழுங்கீனமாகவும், அசுத்தமாகவும் காணப்படுவதாகவும் இது மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதல்ல எனவும் விமர்சித்துள்ள பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம், சிறந்த வசதி வாய்ப்புக்களை வழங்குமாறும் தெரிவித்தது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கான மைதானத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, தவறான முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நியூஸிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, வட அயர்லாந்து ஆகிய நாடுகள் தங்குமிட வசதிகள் தயராகமையால் விடுதிகளில் தங்கவைக்கப்பட வேண்டும் என பொதுநலவாய போட்டிகளில் பங்குபற்றவுள்ள தமது அணியினருக்கு கூறியுள்ளன.
புதுடில்லியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, பொதுநலவாய போட்டிக்கான பிரதான அரங்கான ஜவஹர்லால் நேரு அரங்கத்திற்கு அருகில் பாலமொன்று இடிந்து விழுந்ததால் 19 தொழிலாளிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago