Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சிவசேன இயக்கத்தின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி' என சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். 'எந்திரன்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் மும்பாயில் திரையிடப்பட்டபோது அங்கு அதிதியாக கலந்துகொண்ட ரஜனிகாந்த், அந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் சுபுர்பன் பந்த்ராவில் அமைந்துள்ள 'மடோஸ்றி' இல்லத்தில் சிவசேன தலைவர் பால் தாக்கரேயை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தபோதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படும் இச்சந்திப்பு பற்றி தெரியவருவதாவது... சூப்பர் ஸ்டார் ரஜனிக்கும் சிவசேன தலைவர் பால் தாக்கரேயிற்கும் இடையிலான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்துள்ளன. இச்சந்திப்பில் 'எந்திரன்' திரைப்படத்தின் தொழில்நுட்ப விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் ஆன்மிகம் சம்பந்தமாக பல விடயங்களை பரிமாறிக்கொண்டதாகவும் 'சிவசேன'வை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சந்திப்பு பற்றி ரஜனிகாந்த் கருத்துத் தெரிவிக்கையில்... '60 வயதிலும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என என்னைப்பார்த்து பால் தாக்கரே கேட்கிறார். அவர் 85 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவது எனக்கு வியப்பாக இருக்கிறது...' என்று தன்னுடைய பாணியில் கருத்துக் கூறியிருக்கிறார்.
இரவருக்குமிடையிலான சந்திப்பில் ஆங்கிலத்திலேயே அதிகமாக உரையாடியதாகவும் இடையிடையே மறாட்டி மொழியும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இருவருக்குமிடையிலான இச்சந்திப்பு அரசியல் பிரமுகர்களின் பார்வையையும் இருவர் மீதும் திருப்பி விட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஹிந்தி திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு சிவப்பு கொடி காட்டிய சிவசேன அமைப்பின் தலைவர் பால் தாக்கரே, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தினை கட்டித்தழுவி தனது அன்பினை வெளிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
xlntgson Wednesday, 06 October 2010 08:59 PM
அவரை பகைத்துக்கொண்டால் தெரியும் தானே, அமிதாப்பச்சனுக்கு என்ன நடந்தது? படங்களை திரையிட விடமாட்டார்கள், என்ன? தமிழ்நாட்டில் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியும் ரஜினிக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டது. ஆனால் இவர் சிவசேனையை புகழ்வது நல்லதுக்கு இல்லை. அகில இந்திய அளவில் அரசியலில் நுழையவோ தெரியாது! அரசியலில் நுழைந்தால் இமயமலை அடிவாரத்தில் சன்யாசம் புரிய வேண்டியது வரும் சிவசேனை கட்சிக்கு எதிர்காலம் இல்லை அது சுக்கு சுக்காக உடைந்து விட்டது. மதவெறி, முஸ்லிம் விரோதம், காங்கிரசுக்கு வெற்றியை வழங்கியது மும்பாயில்.
Reply : 0 0
Niys Thursday, 07 October 2010 05:56 AM
சொன்னாலும் சொன்னீர்கள் சரியாக சொன்னீர்கள் Mr.xintgson.
Reply : 0 0
xlntgson Thursday, 07 October 2010 09:24 PM
நன்றி நியாஸ், எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. தொடந்தும் கருத்து தெரிவியுங்கள். பழைய கருத்துக்களை தேடலில் பார்த்து அது போன்ற கருத்துக்களை தெரிவியுங்கள். நான் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அதே மாதிரியான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன-incest-என்னும் உறவுமுறைக்குள் உறவுச்சங்கதிகள் & பால்ய வயதினரைக் குறித்த செய்திகள் நான் எழுதி எழுதி வெறுத்துப் போய்விட்டேன். இளந் தலை முறையினர் இதை தொடரலாம். சரியான வழிகாட்டுதலோடு. நாங்கள் தேவை இல்லாமல் இதையே பேசிக்கொண்டில்லை, என்றறிய!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago