2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஆர்ஜென்டீன முன்னாள் ஜனாதிபதி காலமானார்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியின் கணவருமான நெஸ்டர் கேர்ச்னர் நேற்று புதன்கிழமை காலமானார்.

60 வயதான கேர்ச்னர், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை ஆர்ஜென்டீன ஜனாதிபதியாக பதவி வகித்தார். 2007 ஆம் ஆண்டிலிருந்து அவரின் மனைவியான கிறிஸ்டினா கேர்ச்னர் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது மனைவியின் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துபவராக விளங்கிய மீண்டும் 2011 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எல்கலாபேட் நகரித்திலுள்ள குடும்ப இல்லத்தில் வைத்து நேற்று மாரடைப்புக்குள்ளான நெஸ்டர் கேர்ச்னர் நகர வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்ததாக கேர்ச்சனரின் மருத்துவர் லூயிஸ் பௌனோமோ தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை அவரின் பூதவுடல் தலைநகர் புவனர்ஸ்அயர்ஸுக்கு கொண்டுவரப்பட்டது. அவரின் மரணத்தையொட்டி ஆர்ஜென்டீனாவில் 3 நாட்கள் துக்க தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--