2025 ஜூலை 02, புதன்கிழமை

'அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அதிமுக்கியமான' கட்டமைப்புகளின் பட்டியல் விக்கிலீக்ஸினால் அம்பலம்

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது தேசிய  பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலும் தனது பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளை பட்டியல்படுத்துமாறு தனது தூதரகங்களுக்கு 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி  மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் காஸ் விநியோகக் குழாய்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள்,  போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தமொன்றை நடத்துவதாக அமெரிக்கா கருதினால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளின் விபரத்கொத்தாக இப்பட்டியல் அமையும் எனக் கருதப்படுகிறது.

இப்பட்டியலிலுள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் மருத்துவ அல்லது கைத்தொழில் தொடர்பானவையாகும்.
இதேவேளை இப்பட்டியல் விக்கி லீக்ஸினால் வெளியிடப்பட்டமைக்கு பிரிட்டனின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்  சேர் மல்கம் ரைவ்கைன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய  தகவல்களையே பயங்கரவாதிகள் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர் என அவர் கூறியுள்ளார்.

ஆனால், மனித உயிர்களையும் கட்டமைப்புகளையும் விக்கிலீக்ஸ் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்ற கருத்தை விக்கிலீக்ஸ் சட்டத்தரணி மார்க் ஸ்டீவன்ஸன் நிராகரித்துள்ளார். இதில் எதுவும் புதிய விடயங்கள் இல்லையென அவர் கூறியுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .