Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்சை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஸ்பெய்னில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைநகர் மட்ரிட்டிலுள்ள பிரித்தானிய உயர் தூதரகத்திற்கு முன்பாக முகமூடி அணிந்தவாறு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடனைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஜூலியன் அசேஞ்சுக்கு எதிராக சுமத்திய பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக விடுக்கப்பட்ட நீதிமன்ற பிடிவிராந்தையடுத்து பிரித்தானிய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் சுவீடனுக்கு நாடுகடத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது.
விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் கசிந்த சில தகவல்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்.
பாக்தாத்திலுள்ள ஹோட்டல் அறையில் வைத்து ஸ்பானிய புகைப்படப்பிடிப்பாளர் ஜோஸ் கௌஸோ அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் பலியானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நிறுத்துமாறுமாறு ஸ்பெய்ன் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் விக்கிலீக்ஸ் ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
3 hours ago