2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கனிமொழிக்கு பிணை மறுப்பு

A.P.Mathan   / 2011 ஜூன் 08 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு பிணை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தன்னுடைய கணவன் வியாபார விடயம் தொடர்பாக அடிக்கடி வெளிநாடு செல்வதனால் இளைய மகனின் படிப்பினை தான் கவனிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தனக்கு பிணை வழங்குமாறு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி டெல்லி உயர் நீதிமன்றில் மனு தாக்கலொன்றினை செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நிறைவுற்று இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. பாரிய ஊழல் மோசடி விவகாரத்தில் கனிமொழி கைதாகியிருப்பதனால் பிணை வழங்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் தீர்ப்பினை கேட்டு கதறி அழுதார். இன்றைய தீர்ப்பில் கனிமொழிக்கு பிணை கிடைக்கும் என நம்பி- தி.மு.க. உறுப்பினர்கள் பலரும் மன்றுக்கு வருகை தந்திருந்தனர். இவர்களும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .