2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பற்றி எரிகிறது லிபியா ; செஸ் விளையாடுகிறார் கடாபி

Super User   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபிய அதிபர் கேணல் கடாபியின் படைகளுக்கு எதிராக நேட்டோ படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லிபிய அதிபர் கேணல் முவம்மர் கடாபி செஸ் விளையாட்டில் ஈடுபட்ட காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தலைவரான கிரிசான் இலியும்ஸினோவ்வுடன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  கேணல் கடாபி செஸ் விளையாடியுள்ளார்.  

ரஷ்யாவைச் சேர்ந்த கிரிசான் இலியும்ஸினோவ் லிபியாவுக்கு விஜயம் செய்து கேணல் கடாபியை சந்தித்துப் பேசினார். அப்போதே இவ்விருவரும் செஸ் விளையாட்டில் ஈடுபட்டனர்.
 
மேற்படி வி.ஐ.பி. கள் செஸ் விளையாடுவதை கேணல் கடாபியின் மூத்த மகனான முஹம்மட் அவதானித்துக்கொண்டிருந்தார்.

இந்த  'செஸ் பலகை சந்திப்பு' எங்கு நடைபெற்றது என்பதை லிபிய தொலைக்காட்சி அறிவிக்கவில்லை. எனினும், லிபிய தலைநகர் திரிபோலியில் கேணல் கடாபியை இலியும்ஸினோவ் சந்தித்ததாக ரஷ்யாவின் இன்டர்பெக்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது .

இதேவேளை, தனக்கும் கேணல் கடாபிக்கும் இடையிலான சந்திப்பு இருமணித்தியாலங்கள் நீடித்ததாகவும் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பலியான லிபியாவிலிருந்து தான் வெளியேறப்போவதில்லை என கடாபி தன்னிடம் கூறியதாகவும்; இலியும்ஸினோவ் தெரிவித்துள்ளார்.

'நான்; நாட்டின் ஜனாதிபதியோ அரசனோ அல்லன். எனக்கு லிபியாவில் எந்தப் பதவியும் இல்லை. எனவே நான் விட்டுக்கொடுப்பதற்கு எந்த பதவியும் என்னிடம் இல்லை' என கடாபி கூறியதாக தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பலியான இலியும்ஸினோவ் தெரிவித்துள்ளார்.


 


  Comments - 0

 • bis Thursday, 16 June 2011 05:38 PM

  காய் நகர்த்துகிறாராக்கும்!

  Reply : 0       0

  jaliyuath Thursday, 16 June 2011 06:45 PM

  அந்த வளம் மிக்க நாட்டை அளித்த பெருமை கடாபியையே சாரும்.

  Reply : 0       0

  Rinos Thursday, 16 June 2011 07:38 PM

  இதைத்தான் SLMC தலைவர் அடிக்கடி மேடைகளில் சூளுரைப்பார் :
  " அரசியல் காய் நகர்த்தல் "....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X