Super User / 2011 ஜூன் 16 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானிலுள்ள ஆயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகளுக்கு தந்தையின் பெயராக தனது பெயரை பதிவு செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஆசிவ் அலி ஸர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
சட்டபூர்வமாக பிறந்து ஆனால் பெற்றோர் யாரெனத் தெரியாத நிலையிலுள்ள பெரும் எண்ணிக்கையான குழந்தைகளை பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்கு பாகிஸ்தானின் தேசிய தரவுதளம் மற்றும் பதிவு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அதன்தலைவர் மாலிக் தாரிக் கூறியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, பெற்றோர் பெயர் தெரியாத குழந்தைகளின் தந்தையா தனது பெயரை குறிப்பிடுமாறு ஜனாதிபதி ஆசிவ் அலி ஸர்தாரி தெரிவித்துள்ளார்.
பெற்றோர் பெயர் தெரியாததால் இப்பதிவு நடவடிக்கை முடங்கியிருந்ததாகவும் இதை அறிந்த ஜனாதிபதி ஸர்தாரி மேற்படி உத்தரவை பிறப்பித்தார் எனவும் மாலிக் தாரிக் கூறினார்.
நலன்புரி நிலையங்களிலுள்ள இவ்வாறான பெரும்பாலான குழந்தைகள் 2005 ஆம் ஆண்டுஏற்பட்ட பூகம்பத்தினாலும் கடந்த வருடம் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினாலும் பெற்றோர்களை இழந்தவர்கள் ஆவர்.
பெற்றோர் விபரம் தெரியாத பிள்ளைகளின் நிலை குறித்து சவூதி அரேபியா , ஈரான் போன்ற நாடுகளிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடமும் பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை கோரியதாக மாலிக் தாரிக்கூறினார். அப்பிள்ளைகளுக்கு தந்தை தாய் பெயராக முறையே ஆதாம், ஹாவா ஆகிய பெயர்களை குறிப்பிட வேண்டும் என சிலர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025