2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

அல் கயீடாவின் புதிய தலைவராக அல் ஸவாஹிரி நியமனம்

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அல் கயீடா அமைப்பின் புதிய தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அல் கயீடா ஸ்தாபகத் தலைவரான ஒசாமா பின் லாடன் கடந்த மாதம் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அல் ஸவாஹிரி புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.

'ஷேக் டாக்டர் அய்மன் அல் ஸவாஹிரி இவ்வமைப்பின் அமீராக (தலைவர்) பொறுப்பேற்றுள்ளார் என அல் கயீடாவின் பொதுக்குழு இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள மின்னஞ்சல் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதான ஸவாஹிரி எகிப்தை சேர்ந்த கண் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அல் கயீடாவின் மூளை என  இவர் வர்ணிக்கப்பட்டார்.  பின் லாடனைப் போன்றே இவரும் 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதிக்குப் பின் தலைமறைவானார்.

ஸவாஹிரியை கைது செய்ய உதவுபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 17 June 2011 09:40 PM

    அமெரிக்காவுக்கு தலைவலி போய் திருகு வலி வந்தது மாதிரித்தான் தெரிகிறது! இவர் இருக்கும் இடத்தை யாரேனும் கூறினால் $25 m கொடுக்கிறோம் என்று கடைசியில் எங்களது சேட்டலைட் தொழில் நுட்பங்களின் மூலம் தான் கண்டு பிடித்தோம் ஆகவே அந்த தொகை யாருக்கும் இல்லை என்பார்கள்! காட்டிக் கொடுப்பவர்களுக்கு சீனி என்று வாயில் வெள்ளை மண்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .