Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜூன் 17 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூனை இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஒத்திவைத்துள்ளது. கியூபாவும் ஏனைய சில லத்தீன் அமெரிக்க நாடுகளும் பான் கீ மூனுக்கு ஆதரவு வழங்க தயங்குவதே இதற்குக் காரணம்.
எனினும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் குழுவுடன் (GRULAC) கியூபா பிரச்சினை ஏற்படுத்துவதாக மேற்கு நாடொன்றின் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
' GRULAC, ஒரு குழுவாக பான் கீ மூனை ஆதரிக்குமா என்பது தெளிவில்லாத போதிலும் பான் வெற்றி பெறுவார் என அவர் கூறினார்.
அதேவேளை, இந்த ஒத்திவைப்புக்கு கியூபா காரணம் என்பதை நிராகரித்து ஐ.நாவுக்கான கியூப தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அவர் மீண்டும் தெரிவாகுவதை யாரும் எதிர்க்கவில்லை' என கியூபா தெரிவித்துள்ளது.
எனனும் பான் கீ மூனுக்கு ஆதரவாக கியூபா வாக்களிக்குமா என்பற்கு பதிலளிக்க ஐ.நாவுக்கான கியூப தூதரக பேச்சாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ, கௌதமாலா, பரகுவே ஆகிய நாடுகளும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இப்பதவிக்குப் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பான் கீ மூனை அங்கீகரிப்பதை ஐ.நா. பாதுகாப்பு சபை வெள்ளிக்கிழமை ஜி.எம்.ரி. நேரப்படி 3 மணிவரை தனது ஒத்திவைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago