Super User / 2011 ஜூன் 24 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருவாண்டாவில் டுட்ஸி இனத்தவர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் பெண்களையும் சிறுமிகளையும் வல்லுறவுக்குட்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்ட அந்நாட்டு முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
65 வயதான பௌலின் நைர்மசுஹுகோ எனும் பெண்ணுக்கு ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றம் இன்று வெள்ளிக்கிழமை இத்தண்டனையை வழங்கியுள்ளது.
1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின்போது சுமார் 800,000 டுட்ஸி மற்றும் ஹுட்டு இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
10 வருடகாலமாக நடைபெற்ற இவ்வழக்கில் மேற்படி முன்னாள் அமைச்சர், அவரின் மகன், மற்றும் முன்னாள் அதிகாரிகள் நால்வர் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
ருவாண்டாவின் குடும்ப விவகார மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றிய நைர்மசுஹுகோ, அவரின் சொந்த மாவட்டமான புட்டாரேயில் படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டார்.
டுட்ஸி இனத்தவர்களை முடிந்தவரை விரைவாக அழிப்பதற்காக ருவாண்டா முழுவதும் ஆயுதக்குழுக்களை உருவாக்கும் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்தில் நைர்மசுஹுகோ பங்குபற்றியதாக ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றம் குற்றம் சுமத்தியது.
அவர் மீது மொத்தமாக 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளை நைர்மசுஹுகோ நிராகரித்தார். எனினும் நீதிமன்றம் விசாரணைகளின்பின் அவரை விசாரணை மன்றம் குற்றவாளியாக கண்டது.
5 minute ago
12 minute ago
2 hours ago
05 Nov 2025
ruthra Saturday, 25 June 2011 01:30 AM
இவர்களை போன்ற பல பெண்களால்தான் ஒட்டுமொத்த பெண்கள் குலமும் குற்றத்திற்குள்ளாக்கப்படுகின்றது. வாழ்வதற்கு எந்தவித தகுதியும் இல்லாத இவர்களுக்கு உடனடியா தண்டனை வழங்ப்படவேண்டும். இவர்கள் துடித்துடித்து சாகும் அளவிற்கு இவர்களுக்கு மிக கொடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
Reply : 0 0
xlntgson 0776994341;0716597735 sms only Monday, 27 June 2011 09:37 PM
ruthba, சாத்தியமானது ஏதாவது இருந்தால் கூறுங்கள், மரண தண்டனை இதற்கெல்லாம்- அதுவும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் என்பது கற்பனையே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
2 hours ago
05 Nov 2025