2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டது

Kogilavani   / 2011 ஜூலை 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா தருணத்தில் திறந்துவைக்கப்பட்டது.

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலுள்ள சாய் குலவந்த் மண்டபத்தில், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா குலன்வந்த் மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். புட்டபர்த்தியில் குரு பூர்ணிமாவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை பளிங்குகற்களால் செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட மகா சமாதி  பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், ஆந்திர பிரதேச அமைச்சர்கள் ஜெ.ரகுவீர ரெட்டி, ஜெ. கீதா ரெடி, விஸ்வ ஹிந்து பரிசத் சிரேஷ்ட தலைவர் அசோக் சிங்கல் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இவ்வைபவத்தில் கலந்துக்கொண்டனர்.

இவ்வைபவத்தையொட்டி இன்று புட்டபர்த்தியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--