Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடான யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் தனது 33 வருடகால ஆட்சியிலிருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மாளிகையில் வைத்து யேமன் ஜனாதிபதி சலேஹ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இத்திட்டத்தின்படி விரைவான தேர்தல் நடைபெறும் வரை அவர் தனது அதிகாரங்களை உப ஜனாதிபதி அப்ட்றபா மொஹமட் ஹாடியிடம் கையளிப்பார். எனினும் 90 தினங்களுக்கு கௌரவ ஜனாதிபதியாக சலேஹ் பதவி வகிப்பார்.
இதற்கு பதிலாக ஜனாதிபதி சலேஹ் மீதான குற்றச்சாட்டுகளுக்காக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விடுவிக்கப்படுவார்.
69 வயதான ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ்வின் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஜனவரி முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பலவும் ஜனாதிபதி சலேஹ்வை பதவி விலகுமாறு வலியுறுத்தின.
இந்நிலையில் ஐ.நா. மற்றும் வளைகுடா நாடுகளின் அனுசரணையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025