Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் துருப்பினர் மீது நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து நேட்டோ வருத்தம் தெரிவித்ததை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இத்தாக்குதல் கடுமையான பின்விளைவை ஏற்படுத்தும் எனவும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லையில்இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் துருப்பினர் 24 பேர் பலியாகினர்.
இது குறித்து நேட்டோவும் அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்திருந்தன.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டா ஆகியோர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானிக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக நேட்டோ செயலாளர் நாயகம் அன்டர்ஸ் போக் ரஸ்முசெனும் நேற்று கூறினார்.
ஆனால் நேட்டோ வருத்தம் தெரிவிப்பது போதுமானதல்ல என பாகிஸ்தான் கூறியுள்ளது.
'இது போதுமானதல்ல என நாம் எண்ணுகிறோம் இதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை' என பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளரான மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் கூறியுள்ளார்.
கடந்த 3 வருடங்களில் நேட்டோ தாக்குதல்களினால் 72 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியதாகவும் 250 பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஆப்கானிஸ்தான் பகுதியில் நேட்டோ படையினரும் ஆப்கானிஸ்தான் படையினரும் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் பகுதியிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின் நேட்டோ படையினர் திருப்பித் தாக்கியதகாவும் ஆப்கானிஸ்தான் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எனினும் நேட்டோ மீது பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
2 hours ago
19 Nov 2025
nafeel Tuesday, 29 November 2011 07:40 PM
ஐக்கிய நாடுகள் sabai enga போனது? தூக்கம் போல் நடிக்கிறதா?
Reply : 0 0
PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 03:44 AM
பயங்கரவாதியான ராணுவம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025