2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

நேட்டோ தாக்குதல் எதிரொலி: ஜேர்மன் மாநாட்டை பாகிஸ்தான் பகிஷ்கரிப்பு

Super User   / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஜேர்மனியில் நடைபெறவுள்ள மாநாட்டை பாகிஸ்தான் பகிஷ்கரிக்கும் என பாகிஸ்தான் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நேட்டோ படையினரின் தாக்குதலில் பாகிஸ்தான் துருப்பினர் 24 பேர் பலியான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பொன் நகரில் டிசெம்பர் 5 ஆம் திகதி  இந்த முக்கிய மாநாடு நடைபெறவுள்ளது. 90 இற்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்குபற்ற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நடைபெறவுள்ள மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென பாகிஸ்தான் அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு சிபாரிசு செய்திருந்தது. அதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஐ.நா.விடம் முறைப்பாடு

இதேவேளை, நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நாவிடமும் பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக முறைப்பாடுசெய்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதுவரான அப்துல்லா ஹுஸைன் ஹாருன் எழுதிய கடிதமொன்றில்  பாகிஸ்தானின் ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். 


  Comments - 0

 • meenavan Wednesday, 30 November 2011 10:57 PM

  பாம்பிற்கு பாலூட்டி வளர்ப்பினும் இறுதியில் பாம்பு தீண்டவே செய்யும்,அது தான் பாகிஸ்தானுக்கு நடந்துள்ளது. டொலருக்கு மயங்கியதன் விளைவு தொடர் கதையாகவே .........?

  Reply : 0       0

  ARZATH Wednesday, 30 November 2011 02:21 PM

  சபாஷ் சரியான தீர்மானம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .