2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் ஆப்கானில் பலர் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் பலர் பலியாகியுள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வீதியோரக் குண்டுவெடிப்பில் 5 ஆப்கானிஸ்தான் படையினர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கந்தஹாரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வீதியோரக் குண்டுத் தாக்குதலில் பெண்ணொருவர் பலியானதுடன், சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் படையினரை இலக்குவைத்து போராளிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .