2021 ஜனவரி 27, புதன்கிழமை

சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக திபெத்தியர்கள் அறுவர் தீக்குளிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திபெத்தின் சிசுயான் மாகாணத்தில் உள்ள அபா பகுதியில் 6 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் மத்திய திபெத் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திபெத்தை ஆக்கிரமித்து சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த தீக்குளிப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தீக்குளித்தவர்களில் மூவர் பௌத்த மதகுருமார்களாவர். இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரையில் 69 பேர் தீக்குளித்ததாகவும், அதில் 54 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் தலைமை மாற்றத்துக்காக சீன கம்யூனிஸ்ட் கட்சயின் கூட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில் திபெத்தில் தீக்குளிப்பு போராட்டம் வலுவடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .