2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை; ஆப்கான் ஜனாதிபதியிடம் மன்மோகன்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை  இந்தியாவை சென்றடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று இதன்போது பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது சுரங்கம், உரம், இளைஞர் நலன் மற்றும் சிறு தொழில் மேம்பாடு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், இந்தியாவின் உதவிகளை ஆப்கான் மக்கள் அறிந்திருக்கின்றனர். அவர்களுடைய வாழ்த்துக்களை நான் எடுத்து வந்துள்ளேன். இந்திய தொழிலதிபர்களை ஆப்கான் பக்கம் திரும்பச் செய்யும் பணிகளை மேற்கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.

இவ்விடயத்தில் இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தானின் மிகச்சிறந்த நண்பர் என்றும் கூறியுள்ளார்.

  Comments - 0

  • radish.s Wednesday, 14 November 2012 07:56 AM

    சார்க் நாடுகளில் முதலில் மனித‌ உரிமை நிலையினை உயர்த்த மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .