2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பால் தாக்ரே குறித்து முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்ட இரு பெண்கள் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் மும்பையில் கடையடைப்பு மேற்கொண்டமை குறித்து முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்ட பெண்ணொருவரும் அந்த கருத்து ஆதரவு தெரிவித்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த கருத்தை வெளியிட்ட பெண்ணின் உறவினரது மருந்தகம் ஒன்று, பால் தாக்ரேவின் சிவசேனா கட்சித் தொண்டர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த சனிக்கிழமை, மரணமானார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.

இந்த கடையடைப்பை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவர் முகப்புத்தகத்தில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். 'தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு மற்றுமொரு பெண் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த தகவலைப் பார்த்த சிவசேனா கட்சித் தொண்டர்கள் கலவரமடைந்துள்ளனர். இதேவேளை, குறித்த இரு பெண்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களுக்கு எதிராக வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும், மும்பையின் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் மருந்தகத்தை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து உடைத்து சேதமாக்கியுள்ளனர். (தற்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .