2021 மே 08, சனிக்கிழமை

கைதான மாலி பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலி பிரதமர் செய்க் மொடிபோ டயரா படையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலி தலைநகர் பமாகோவிலுள்ள அவரது வீட்டில் மாலி பிரதமர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

மாலி பிரதமர் நாட்டை விட்டு பிரான்ஸுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச்சில் நடந்த சதிப்புரட்சியின் தலைவர் கப்டன் அமடோ சனொகோ இவரைக் கைதுசெய்யுமாறு கட்டளையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலி நாட்டு இராணுவம் ஆட்சியை உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளித்த பின்னர் செய்க் மொபிடோ டயரா இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு பிரதமரிடம் 8 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் காலவரையறையின்றி பதவியிலிருக்கும் எண்ணத்துடன் செயற்பட்டார் இராணுவப் பேச்சாளர் பக்காரி மரிகோ கூறினார்.
 
இதேவேளை, இடைக்கால ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை செய்க் மொடிபோ டயரா தடுத்துவைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X