2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஆப்கானில் குண்டு வெடிப்பு; லொகர் மாகாண ஆளுநர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆப்கானிஸ்தானின் லொகர் மாகாண ஆளுநர்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் தொழுகையின்போது பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலின் முன்பாக ஆளுநர் அர்சல ஜமால் நின்றுகொண்டு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில், மேசை ஒன்றிற்கு கீழே மறைத்துவைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம் 15 பேர் காயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என மறைந்த  ஆளுநர் அர்சல ஜமாலின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .