2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்: தாய்லாந்து அரசர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நலனைக் கருதி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்குமாறு மக்களிடம் தாய்லாந்து அரசர் பூமிபொல கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது பிறந்ததினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியிலேயே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

பாங்கொக்கில் வன்முறை ஆர்ப்பாட்டங்களின் பின்னர் உண்டான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் மத்தியில் மதிப்புக்குரிய அரசரின் 86ஆவது பிறந்தநாளை தாய்லாந்து கொண்டாடுகின்றது.

தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நவம்பர் மாதம் 24ஆம் திகதி; தமது எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கினர்.

அரசரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆயினும் திரும்பவும் அவற்றை தாக்க வருவோமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .