George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில், குறைந்தது 5 உக்ரைன் துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறிய நகரான டெபால்சேவிலிருந்து அரசாங்க படைகளை வெளியேற்றும் முயற்சிகளை பிரிவினைவாதிகள் மேற்கொண்டபோது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் போக்குவரத்தின் மூலோபாயமாக காணப்படும் வடகிழக்கு பிராந்தியத்தின் பிரதான நகரான டொன்ஸ்டகில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தை, சனிக்கிழமை முறிவடைந்ததையடுத்து இந்த மோதல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
24 மணிநேர காலப்பகுதியில், 100ற்றும் அதிகமான வான்வழி தாக்குதல்களை பிரிவினைவாதிகள் மேற்கொண்டதாக உக்ரைனின் தலைநகரான கிவ்விலுள்ள இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது ரொக்கட் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago