2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மகத்தான பங்குடமையை உருவாக்க முடியும்: பிரித்தானிய பிரதமர்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவினால் இந்தியாவுடன் 21ஆம் நூற்றாண்டின் மகத்தான பங்குடமை ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான 3 நாள் விஜயத்தின் தொடக்கமாக பிரித்தானியப் பிரதமர் மும்பை வந்து சேர்ந்துள்ளார்.

வணிகத்தை முக்கிய கவனத்தில் எடுத்துள்ள இந்த விஜயத்தின்போது, ஆகவும் பெரிய வர்த்தக தூதுக்குழு ஒன்றை பிரதமர் கூடவே அழைத்துவந்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள யுனிலெவர் தலைமையகத்தில் நடைபெற்ற வினா – விடை அமர்வு ஒன்றில் உரையாற்றிய அவர் 'இந்தியாவின் எழுச்சி இந்த நூற்றாண்டின் மகத்தான தோற்றப்பாடாக இருக்கப்போகின்றது' எனவும் கூறினார்.

'பிரித்தானியா நீங்கள் தேடும் பங்காளியாக இருக்க விரும்புகின்றது. என்னைப் பொறுத்தவரையில் வானமே எல்லை' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X