2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இந்தியாவில் ரயில்கள் தடம் புரண்டதில் 27 பேர் பலி; பலர் காயம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா  என்ற இடத்துக்கு அருகில் மச்சக் ஆற்றின் பாலமொன்றை கடக்கும்போது எதிரெதிர்த் திசைகளில், அடுத்தடுத்த தண்டவாளங்களில் பயணித்த இரு பயணிகள் ரயில்கள் சில நிமிட இடைவேளைகளில் செவ்வாய்க்கிழமை இரவு தடம் புரண்டதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டும், 300 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

முதலாவதாக மும்பையிலிருந்து வாரணாசி நோக்கி பயணித்த காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தடம் புரண்டிருந்தது. தொடர்ந்து சில நிமிடங்களின் பின் ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கி பயணித்த ஜனதா எக்ஸ்பிரசும் அதே இடத்தில் தடம் புரண்டது.

கொல்லப்படவர்களில் 10 பெண்களும், 5 சிறுவர்களும் உள்ளடங்குவதாக மத்திய பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 300 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வராங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்று நீர்மட்டம் உயர்ந்து கடுமையான நீரோட்டம் இருந்ததால் தண்டவாளங்கள் இருந்த மணற்படுக்கை தளர்ந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்தவர்களின் இரத்த உறவினர்களுக்கு ரூபாய் 2 இலட்சமும், பாரிய காயங்களுக்குள்ளவனர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும், சிறிய காயங்களுக்குள்ளனவர்களுக்கு ஷரூபா 25 ஆயிரமும் நட்டஈடு வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .