2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஹெலிஹொப்டர் விபத்தில் 16 பொலிஸ் பலி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட-மேற்கு கொலம்பியாவில் உள்ள காட்டுப்பகுதியில் பொலிஸ் ஹெலிகொப்டர் விபத்துக்குளாகியதில், குறைந்தது 16 அதிகாரிகள் கொல்லப்பட்டள்ளனர்.

உசுகா கிளான் எனப்படும் வட-மேற்கு கொலம்பியாவில் உள்ள சக்தி வாய்ந்த போதைமருந்துக் கடத்தல் குழுவின் தலைவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் சென்ற பொலிஸாரே இதில் பலியாகியுள்ளனர்.

உயரம் குறைந்த மேக மூட்டம் காரணமாக, மலையின் ஒரு பக்கத்தில் மோதியிருக்கலாம் என கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ் கார்லோஸ் விலேஜஸ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஹெலிஹொப்டர் விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் காணப்படும் குற்றச்செயலில் ஈடுபடும் குழுக்கள், இடதுசாரிப் போராளிகளால் சுட்டு வீழ்த்தியிருக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், மேற்படி நடவடிக்கையில் பங்கேற்ற மற்றைய இரண்டு ஹெலிக்கொப்டர்களும் எந்தவித துப்பாக்கிசூடு இடம்பெற்றதாக தெரிவிக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .