Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் முறைகேடுகள் தொடர்பாக பாகிஸ்தானில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட சிறுவர்கள், வற்புறுத்தி உடலுறவு மேற்கொள்ள வைக்கப்படும் 400க்கும் மேற்பட்ட காணொளிக் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள பஞ்சாப்பின் முதலமைச்சர் ஷபாஸ் ஷரீப், “இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். அவர்களது விதியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. எந்த விலை கொடுத்தேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கப்பெறும்” எனத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் 14 வயதிலும் குறைந்தவர்கள் என்ற நிலையில், பாகிஸ்தானை இச்சம்பவம் உலுக்கியுள்ளதோடு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்று கோரி, ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு, இவ்விடயத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் தன்னுடைய கடமையை ஆற்றத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025