2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வடகொரியாவுக்கு எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவமற்ற பிராந்தியத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு படைவீரர்கள் கடுமையாகக் காயமடைந்த நிலக்கண்ணிவெடித் தாக்குதலை நடாத்தியமைக்காக, வடகொரியாவை தென்கொரியாக கடுமையாக எச்சரித்துள்ளது.

வடகொரியா மேற்கொள்ளும் தூண்டிவிடும் அடிப்படையான தாக்குதல்களுக்கு அதைவிட அதிகப் பலம்மிக்க பதில் வழங்கப்படுமென, தென்கொரியாவின் இணைந்தபடைகளின் பிரதானிகளின் நடவடிக்கைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கூ ஹொங்-மோ தெரிவித்தார்.

குறித்த தாக்குதலுக்கு வடகொரியா மன்னிப்புக் கோர வேண்டுமெனத் தெரிவித்துள்ள தென்கொரியா, அந்த நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டமைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இராணுவமற்ற பிராந்தியத்தில் தென்கொரியாவின் பகுதிக்குள் வடகொரியா அனுமதியற்றுப் புகுந்தே இந்தத் தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த தென்கொரிய வீரரொருவரின் இரண்டு கால்களில் சில பாகங்கள் நீக்கப்பட வேண்டி ஏற்பட்டதோடு, மற்றைய வீரரின் ஒரு கால் பாதம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .