2021 மார்ச் 03, புதன்கிழமை

சுந்தர் பிச்சைக்கு மோடி வாழ்த்து

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியரான சுந்தர் பிச்சைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை வழங்கியுள்ளார்.

“வாழ்த்துகள் சுந்தர் பிச்சை. கூகிளில் புதிய பணிக்கான வாழ்த்துகள்” என நரேந்திர மோடி, தனது டுவிட்டர் தளம் மூலம் வாழ்த்தினார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சை என அழைக்கப்படும் பிச்சை சுந்தரராஜன், கரப்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்திருந்தார்.

இதற்கு முன்னர், கூகிள் நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவின் தலைவராக இருந்த அவர், ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் பிரதம நிறைவேற்று அதிகாரியாகச் செயற்படுகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .