Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள கல்லூரியொன்றின் மாணவர்கள், பரீட்சையின் போது மோசடி செய்வதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரீட்சையைப் புறக்கணித்துள்ளனர்.
துணை மருத்துவ விஞ்ஞானங்களுக்கான கேஷ்லதா நிறுவனத்தைச் சேர்ந்த 60 மாணவர்களே இவ்வாறு பரீட்சையைப் புறக்கணித்துள்ளனர்.
றோகில்கான்ட் மருத்துவக் கல்லூரியிலேயே இவர்களுக்கான பரீட்சை மண்டபம் காணப்பட்டதோடு, கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை பரீட்சைக்கான ஏமாற்றுவதற்கான வழிவகைகளைச் செய்துதராமைக்காக மாணவர்கள் பரீட்சையைப் புறக்கணித்தது மாத்திரமன்றி, தங்கள் உடல்களில் வெட்டுக்களை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் அடுத்த கட்டமாக, மாணவொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார்.
நிலைமை கட்டுக்கு மீறியதன் காரணமாக, பொலிஸாரை அழைத்த கல்லூரி நிர்வாகிககள், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago