Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 05 , மு.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தக்ஷினா கன்னடா மாவட்டம், அரேபிய கடலுக்கப்பாலுள்ள எல்லையின் உல்லல் கரையோரத்தில், படகொன்று மூழ்கியதில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 27 வெளிநாட்டவர்களை, கடலோரக் காவல்படையினர், நேற்று (04) காலை மீட்டுள்ளனர்.
இவர்களின் 4 பேரை, சனிக்கிழமை மீட்டதாகவும் மிகுதியாக இருந்த 23 பேரை, நேற்றுக் காலை மீட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த படகில் 33 பேர் இருப்பதாக ஏற்கெனவே தகவல் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை நள்ளிரவு, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நால்வரை, ஓர் இறப்பர் படகு மற்றும் நீச்சல் அதிகாரிகளின் உதவியுடன், காவல்படையினர் மீட்டுள்ளனர். இதன்பின்னர் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின்னர், எப்போதும் பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர் போன்றவை பயன்படுத்தப்படாமல், உயர்காப்புக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago