2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பிரச்சார கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 31 பேர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாக்தாத் நகரத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டமொன்றின் இந்த குண்டு வெடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்  தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஊர்வலமாக சென்றவர்கள் மீது 3 குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த வாரத்தில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதால் அதனை குறிவைத்து அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத குழுவொன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈராக்கில் அமைதியின்மையும், ஆயத வன்முறைகளும் அதிகரித்து வரும் நிலையில் இந்த குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--