2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாக். தற்கொலைத் தாக்குதல்களில் ஊடவியலாளர்கள் உட்பட 40 பேர் பலி

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் 40 பேர் பலியாகியுள்ளனர். தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் இருவர், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 10 பேரும் பலியானவர்களில் அடங்குகின்றனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள மொஹ்மன்ட் மாவட்டத்தில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தற்கொலை குண்டுதாரிகள் பொலிஸாரின் சீருடை அணிந்து வந்து தாக்குதல் நடத்தியதாக அரசாங்க அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த, தலிபான்களுக்கு எதிரான குழுவொன்றின்மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய தலிபான் இயக்கம் இத்தாக்குதலுக்கு உரிமை கோருவதாக அந்த இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--