Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலொன்றில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பாக்தாத்துக்கு 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டிக்ரித் நகரில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நிலையமொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் பாக்தாத் தேவாலயமொன்றில் 50 பேர் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஈராக்கில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் உள்ளது.
நூற்றுக்கணக்கானோர் நேர்முகப் பரீட்சைக்காக வரிசையில் காத்திருந்தபோது, குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கியொன்றை அணிந்து வந்த ஒருவர் அதை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு அல் குவைதாவே காரணம் என சலாஹுதீன் மாகாண பிரதி ஆளுனர் அஹ்மட் அப்துல் ஜபார் கூறியுள்ளார்.
புலியானவர்களில் பெரும்பாலானோர் பொலிஸில் இணைவதற்காக வந்திருந்தவர்கள் ஆவர்.
டிக்ரித், ஈராக்கின் முன்னாள் ஜனாபதி சதாம் ஹுஸைனின் சொந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு கிளர்ச்சியாளர்கள் வலுவாக உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago