2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சீன விமான விபத்தில் 42 பயணிகள் பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

சீனாவில் பயணிகள் விமானமொன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 42 பயணிகள் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு சீனாவின் ஹெலொங்ஜியாங் மாகாணத்தின் யிச்சுன் நகரத்திலுள்ள விமான நிலையத்திலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விமான விபத்து இடம்பெற்றதாக அந்த நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விமானம் தரையிறங்கும்போது தீப்பற்றி எரிந்ததாகவும் சீன நாட்டு அரச ஊடகம் தெரிவித்தது.

இந்த விமானத்தில் 5 சிறுவர்கள், 5 விமானப் பணியாளர்கள் உட்பட  91  பேர் பயணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீனாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் 55 பொதுமக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .