2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஓர் இஸ்ரேலிய சிப்பாய், 477 பலஸ்தீன கைதிகள் பரிமாற்றம்

Super User   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலஸ்தீனியர்களால் கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஒருவரை விடுவித்துக் கொள்வதற்காக தன்னிடமுள்ள 477 பலஸ்தீன கைதிகளை விடுவித்து, பலஸ்தீனததிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை இஸ்ரேல் இன்று காலை ஆரம்பித்தது.

பலஸ்தீன கைதிகளை ஏற்றிய முதலாவது வாகனத் தொடரணி இஸ்ரேலிலிருந்து இன்று பலஸ்தீனத்தின் மேற்குக் கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இவ்வாகனத் தொடரணியில் விடுதலை செய்யப்பட்ட 96 பலஸ்தீன கைதிகள் உள்ளனர்.  

அவர்களைத் தொடர்ந்து மேலும் 3 வாகனத் தொடரணிகள் இஸ்ரேல் -காஸா எல்லையிலுள்ள 'கரீம் ஷாலோம்' எனும் இஸ்ரேலிய இராணுவ முகாமை நோக்கிச் செல்லவுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மொத்தமாக 477 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் அதன் பரம எதிரியான ஹமாஸின் ஆளுகைக்குட்பட்ட காஸா பிராந்திய நிர்வாகத்திற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி இப்பலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலிய சிப்பாயான  கிலாட் ஷாலிட்டை ஹமாஸ் விடுதலை செய்யும்.

இஸ்ரேலிய அரசாங்கத்தினால் தனியொரு நபருக்காக செலுத்தப்படும் மிகப் பெரும் விலையாக மேற்படி 477 கைதிகளின் விடுதலை கருதப்படுகிறது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, குற்றவாளிகளாக காணப்பட்ட பெரும் எண்ணிக்கையான பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவதை அந்நாட்டில் சிலர் எதிர்த்தாலும் கிலாட் ஷாலிட் மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பி வருவது உணர்ச்சிபூர்வமானதாக உள்ளது. ஏனெனில் கடந்த 26 வருடகாலத்தில் பலஸ்தீனியர்களால்கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் உயிருடன் திரும்பி வருவது இதுவே முதல் தடவையாகும்.

கிலாட் ஷாலிட் 2006.06.25 ஆம் திகதி காஸா எல்லையில் வைத்து ஹமாஸ் உட்பட காஸாவைத் தளமாகக் கொண்ட ஆயுதபாணி குழுக்களால் கடத்தப்பட்டார்.  அப்போது அவர் 19 வயதான இராணுவ கோப்ரலாக இருந்தார்.

இன்று விடுவிக்கப்படும் , அவர் காஸாவிலிருந்து எகிப்தின் சினாய் தீபகற்பத்திற்கு சென்று பின்னர் இஸ்ரேலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. டெல் நோவ் விமானப்படைத் தளத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உட்பட இஸ்ரேலிய தலைவர்கள் பலர் அவரை வரவேற்க காத்திருக்கின்றனர்.

இதேவேளை இஸ்ரேலினால் விடுதலை செய்யப்படும் பலஸ்தீன கைதிகள் பலரும் எகிப்துக்கூடாக துருக்கி, சிரியா, கட்டார் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். இதற்காக கெய்ரோ விமான நிலையத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0

 • umpaa Wednesday, 19 October 2011 07:23 PM

  இது என்ன புதிய விடயமா ! இன்று விடுவார்கள் நாளை பிடித்து ஜெயிலில் போடுவார்கள் 1000 ஜீவன்களை. இது ஒரு நாடகம்.

  Reply : 0       0

  Mattran Wednesday, 19 October 2011 08:19 PM

  இன்று விட்டு விடுவார்கள் நாளை Missile தகர்பில் 1௦௦௦ பேர் பலி என்ற செய்தி வரும்.......

  Reply : 0       0

  safraj Thursday, 20 October 2011 06:23 PM

  பலஸ்தீன விடுதலை ஆரம்பம் alhamthulillah.

  Reply : 0       0

  kamsab Tuesday, 18 October 2011 09:57 PM

  என்ன சொல்ல ? எப்படி சொல்ல ? எத சொல்லுவேன் !!

  Reply : 0       0

  ashqar Tuesday, 18 October 2011 11:04 PM

  மாஷா அல்லாஹ்,இதிலிருந்து உலக நாடுகள் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இஸ்ரேலே ஹமாஸை அங்கீகரித்துள்ளது என்பதுவே. அவ்வாறெனின் ஏன் அமெரிக்காவால் அவர்களை அங்கீகரிக்க முடியவில்லை. இனி இஸ்ரேலின் முடிவுகாலம்தான்.

  Reply : 0       0

  சிறாஜ் Wednesday, 19 October 2011 02:16 AM

  கொடுங்கோல் ஆட்சி செய்யும் இஷ்ரேலியப் படைகளின் நாசகாரத் தாக்குதலுக்கு இன்னும் அப்பாவி பலஸ்தீன மக்கள் அழிந்து கொண்டே இருக்கின்றனர். இஷ்ரேலிய தீவிரவாதப்படைகளால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது பலியாகிக்கொண்டிருக்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--