2021 ஜனவரி 20, புதன்கிழமை

50 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய படை வீரருக்கு சிறை

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, லேக்லாண்ட் பகுதியில் உள்ள விமானப் படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்ற பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகாரிக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நபர் இதுவரை 50 பெண்களை இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் விமான படைகளுக்கு தேர்வானவர்களுக்கு இப்பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பயிற்சிக்கு வந்த பெண்களிடம்  அதிகாரிகள் தவறாக நடந்து கொள்வதாக அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

விசாரணையின்போது அதிகாரி ஒருவர் 50 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேற்படி அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பயிற்சி துறை தளபதி எட்வர்ட் ரைஸ், 'விமான படையில் பாலியல் வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்றார்.

'பயிற்சிக்கு வந்த பெண்களை துன்புறுத்திய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய லூயிஸ் வாக்கர் என்ற அதிகாரிக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .