2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சீனாவில் வெள்ளம்; 50பேர் பலி

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அந்நாட்டின் பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த மேற்படி செய்திகள் வெள்ளத்தில் சிக்குண்ட 15பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக கூறுகின்றன.

குறித்த நாட்டில் தொடரும் இந்த நிலைமை காரணமாக, சுமார் 17.2 மில்லியன் பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளதுடன், 5இலட்சத்து 97ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 9 இலட்சத்து 46ஆயிரத்து 500 ஹெக்டெயார் விளை நிலங்கள் இந்த மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதம் சீனாவில் ‌பெய்த கனமழைக்கு 260பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--