2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

52 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய கியூபா நாட்டு அரசு இணக்கம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியூபா நாட்டு அரசாங்கமானது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 52 அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரிகளுடன் ஹவானாவில் நடைபெற்றிருந்த பேச்சுவார்த்தையினை அடுத்தே, கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், 5 அரசியல்க் கைதிகள் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி கைதிகள் 52 பேரையும் பொறுப்பேற்பதற்கு ஸ்பெயின் தயாராகவிருப்பதாக ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் முகுஷல் ஏஞ்சல் மொராடினோஸ் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--