2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வங்கக்கடலில் 550 மீனவர்களை காணவில்லை

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளிக்கிழமை 550 மீனவர்கள் மோசமான காலநிலை காரணமாககாணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 33 ட்றோலர் படகுகளில் இம்மீனவர்கள் வங்ககக் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

கொல்கத்தாவிலிருந்து 80 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காக்திவீப் மற்றும் அயற்புறங்களிலிருந்து நேற்று இம்மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்ததாக மாவட்ட நீதிபதி என்.எஸ்.நிஜாம் தெரிவித்துள்ளார்.

இம்மீனவர்களை தேடுவதற்காக இந்திய கரையோர காவற்படை கப்பலொன்றும் ஆளில்லா விமானமொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்மீன்பிடி படகுகள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நீதவான் நிஜாம் கூறியுள்ளார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .