Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்திலுள்ள அக்ஸு நகரத்திலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெடிபொருள்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியே சனநடமாட்டமுள்ள பகுதியில் வெடித்ததாக உள்ளூராட்சிப் பேச்சாளார் கூறினார்.
உடனடியாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறிய அவர், இதுவொரு குற்றச்செயலா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.
கடந்த வருடம் சின்ஜியாங்கில் முஸ்லிம் உய்குர் சிறுபான்மை இனத்தவருக்கும் ஹான் சீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெற்றது. கடந்த காலங்களில் சின்ஜியாங்கில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு உய்குர் இனத்தவர்களே காரணம் என்று சீன நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025