2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சீன மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஆக உயர்வு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த மண்சரிவில் அகப்பட்டு 1000 பொதுமக்கள் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் புயல் வீச ஆரம்பித்துள்ள நிலையில் தொடர்ந்து அடை  மழை பெய்து வருவதுடன், அங்கு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பகுதியில் தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில் விசேட நோய்த் தடுப்புப் பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,காலநிலை மோசமடைவதற்கு முன்னர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மீட்புப் பணியாளர்களிடம் சீனப் பிரதமர் வென் ஜியாபோ வலியுறுத்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--