Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 8 படையினரும் 12 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் பகுதியிலேயே இந்த மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வஸிரிஸ்தான் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியிலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் அந்த நாட்டு இராணுவத்தினரும் போராளிகளும் ரொக்கட் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 கிளர்ச்சியாளர்கள்; கொல்லப்பட்டனர்.
சுமார் 100 கிளர்ச்சியாளர்கள் படையினர் மீது ரொக்கட் மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago